NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் அணியின் அடுத்த தலைவர்கள் யார்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான்  அணியின் 3 வகையான போட்டிகளில் தலைவராக இருந்த  பாபர் அசாம் விலகியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அதன்படி டெஸ்ட் தலைவராக ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான தலைவராக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான தலைவராக யாரையும் நியமிக்கவில்லை. முகமது ரிஸ்வான் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles