இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் மூன்றாவது போட்டி இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி
முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழந்து 218 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இதனையடுத்து 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து
211 ஓட்டங்களை பெற்று தோல்விடைந்துள்ளது.
இதேவேளை, முன்னதாக இடம்பெற்ற 2 போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் குறித்த போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.