NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Arnold Classic கட்டழகர் போட்டியில் லூசன் புஷ்பராஜுக்கு 4ஆம் இடம்

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான அர்னோல்ட் கிளாசிக் (Arnold Classic 2023) கட்டழகர் போட்டியில் இலங்கையின் லூசன் புஷ்பராஜ் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தப் போட்டித் தொடரில் Super Heavyweight பிரிவில் அவர் பங்கேற்றிருந்மை குறிப்பிடத்தக்கது.அர்னோல்ட் கிளாசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை வீரராக சாதனை படைத்த லூசன் புஷ்பராஜ், கடந்த ஆண்டு நடைபெற்ற அர்னோல்ட் கிளாசிக் கட்டழகர் போட்டியிலும் அவர் நான்காம் இடத்தைப் பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2012 முதல் Mr,Sri Lanka பட்டத்தை வென்ற புஷ்பராஜ், ஆசிய மற்றும் உலகளாவிய முன்னணி கட்டழகர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற இம்முறை அர்னோல்ட் கிளாசிக் கட்டழகர் போட்டியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.அர்னோல்ட் கிளாசிக் கட்டழகர் போட்டி உலகில் மிகப்பெரியளவில் இடம்பெறும் போட்டிகளில் ஒன்றாகும். அதுமாத்திரமின்றி, இவ்வாண்டு 35ஆவது ஆண்டாக இப்போட்டித் தொடர் இடம்பெற்றது என்பதுடன், அதன் இணை நிறுவனர் Arnold Schwarzenegger இல்லாத முதல் போட்டியாகவும் இது நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles