NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2023 தொடரில் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள் !

LPL போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக வீரர்கள் ஏலம் நடத்தப்பட்டதுடன், இம்முறை ஏலத்தில் 360 வீரர்கள் பங்குகொண்டதோடு, 5 அணிகளாலும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தின் மூலம் வாங்கப்பட்டனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த LPL வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இலங்கை வீரர்களே அதிகூடிய விலைகளுக்கு வாங்கப்பட்டனர். அதிலும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 5 வீரர்களும் இலங்கை தேசிய அணி வீரர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 3 பருவங்களைப் போல (Seasons) இந்த ஆண்டு LPL வீரர்கள் ஏலத்தின் மூலம் இலங்கையில் உள்ள நான்கு தமிழ் பேசும் வீரர்கள் 2 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் 7 தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், 2021இல் அது ஐந்தாகவும், 2022இல் 3 ஆகவும் குறைவடைந்தது. எனினும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4 ஆக  உள்ளது.

அதுமாத்திரமின்றி, ஜப்னா கிங்ஸ் அணிக்காக கடந்த 3 பருவங்களாக ஆடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரம் தான் ஒரேயொரு தமிழ் பேசுகின்ற வீரராக அனைத்து பருவங்களிலும் விளையாடியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Share:

Related Articles