NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL போட்டிகளின் ஒலிபரப்பு உரிமம் எமது தமிழ்FM வானொலிக்கு !

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடரான, LPL தொடரின் அனைத்து போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ தொலைக்காட்சி உரிமத்தை SBC தொலைக்காட்சியும் வானொலி உரிமத்தை TAMIL FM வானொலியும் பெற்றுக்கொண்டுள்ளது.

வருடாந்தம் நடத்தப்படும் LPL தொடர் இலங்கை ரசிகர்களை தாண்டி உலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை 3 தொடர்கள் இடம்பெற்றுள்ளதுடன், இம்முறை இடம்பெறவுள்ள 4 ஆவது கிரிக்கெட் தொடர் ஜீலை 30 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Colombo Strikers, Jaffna Kings, Galle Titens, Dambulla Aura மற்றும் B Love Kandy ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதேவேளை, உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்களான 

Babar Asam, Devit miller, Shakib Al Hasan, Suresh Raina போன்ற வீரர்களும் விளையாடுகின்றனர்.

இத்தொடரின் போட்டிகள் மாலை 3.30 மணிக்கும்  இரவு  7.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலை இப்போட்டிகள் அனைத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி உரிமத்தை SBC தொலைக்காட்சியும் வானொலி உரிமத்தை TAMIL FM வானொலியும் பெற்றுக்கொண்டுள்ளது.

எனவே ஜீலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை LPL போட்டிகளை SBC தொலைக்காட்சியில் கண்டுக்களிக்க முடியும் என்பதுடன் போட்டிகள் தொடர்பான முழு தகவலையும் எங்கேயும் எப்போதும் TAMIL FM 99.5/99.7 வானொலி ஊடக உடனுக்குடன் கேட்கவும் முடியும்.

Share:

Related Articles