ஆசியக் கிண்ண விளையாட்டின் T20 போட்டியில் மங்கோலியாவை எதிர்த்து விளையாடிய நேபாளம் 314 ஓட்டங்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மங்கோலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி நேபாளம் இரண்டு விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்கள் எடுத்தது.
குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ஓட்டங்களும், ரோஹித் பௌடல் 27 பந்துகளில் 61 ஓட்டங்களும் குவித்தனர். தீபேந்திரா சிங் 10பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார். 13.1 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த மங்கோலியா 41 மாத்திரம் ஓட்டங்கள் எடுத்து 273 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் நேபாளம் செய்த சாதனைகள் –
அதிவேக சதம் – குஷால் மல்லா – 34 பந்துகள்
அதிவேக அரைசதம் – திபேந்திரா சிங் – 9 பந்துகள் (யுவராஜ் சிங்கின் 16 ஆண்டு அதிவேக அரைசத சாதனையை முறியடித்தார் திபேந்திரா)
T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – நேபாளம் 314 ஓட்டங்கள்
T20 போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி – நேபாளம் 273 ஓட்டங்கள் T20 போட்டியில் 300 ஓட்டங்களை கடந்த முதல் அணி – நேபாளம் (முந்தைய அதிகபட்ச சதனை 278 ஓட்டங்கள்).