NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“இங்கிலாந்து – அயர்லாந்து” முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி !

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 524 ஓட்டங்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன்பின்னர் 352 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இறுதியில், அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 362 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 12 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது.

இதன்போது ஒல்லி போப் ஆட்ட நாயகன் விருது வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles