NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T-20 உலகக் கிண்ண தொடருக்குத் தகுதி பெற்றது நமீபிய அணி!

ICC T-20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ஆம் திகதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இத்தொடருக்கு, போட்டியை நடத்தும் அமெரிக்க மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் நேரடியாகவும், 2022ஆம் T-20 உலகக் கிண்ணத்தில் முதல் 8 இடங்களை பிடித்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இவற்றுடன் 2022ஆம் ஆண்டு நவம்பர் 14 தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் என 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

 மேலும்,மீதமுள்ள 8 அணிகளுக்காக அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன் ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று T-20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளதுடன், இந்த வரிசையில் தற்போது நமீபியா இணைந்துள்ளது. உலகக் கிண்ண தொடரில் நமீபியா விளையாட உள்ளது இது 3ஆவது முறையாகும்.

Share:

Related Articles