பொரளை – ஓவல் மைதானத்திற்கு அருகில் இயங்கக்கூடிய தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 7, T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 01 LMG தோட்டாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கோமரன்கடவல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோமரன்கடவல கஜுவத்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.