NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 உலகக் கோப்பை – இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு IS அச்சுறுத்தல்?

இந்த ஆண்டு T20 உலகக் கோப்பையில், நியூயார்க்கில் இரத்தம் சிந்துவது குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்குமா? என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

ISISக்கு ஆதரவான சுவரொட்டி ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது. அதில், ‘நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்…’ என்று எழுதப்பட்டு, இரத்தச் சிவப்பு நிறத்தில் – ‘நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்…’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 9ஆம் திகதி அன்று ‘நாசாவ் ஸ்டேடியத்தை குறித்த சுவரொட்டி சுட்டிகாட்டுகிறது. குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

குறித்த சுவரொட்டியில், மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்களின் படங்கள் மற்றும் டைனமைட் குச்சியுடன் கூடிய கடிகாரம் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) செய்தித் தொடர்பாளர், ‘நிகழ்ச்சியில் உள்ள அனைவரின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமையாகும். மேலும் எங்களிடம் விரிவான மற்றும் வலுவான பாதுகாப்புத் திட்டம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles