NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 தொடரில் இருந்து 6 அவுஸ்திரேலிய வீரர்கள் ரிலீஸ்!

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்டT20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இன்று 3ஆவது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் அவுஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள். ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் அவுஸ்திரேலிய புறப்பட்டுவிட்டனர்.

உலகக் கோப்பையில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே T20 அணியில் நீடிக்கிறார். பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்{ய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

Share:

Related Articles