20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், All Rounder’கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர் தரவரிசையில் ரவி பிஷ்னோயுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் இணைந்து முதலிடத்தை பிடித்தார். இருவரும் 692 புள்ளிகளுடன் உள்ளனர். இதே போல் 3வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்க (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (758) உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் பங்களாதேஷின் ஷகீப்-அல்-ஹசன் 272 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (210), 4வது இடத்தில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (200) உள்ளனர்.