ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.