NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் தொழிநுட்பம் !

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் வகையில் புதிதாக ஒரு தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியமே என்ற நிலை உருவாகிவிட்டது. தனிப்பட்ட பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டாலும், AI தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுக்க முடியாது என்கிறது தொழில்நுட்ப உலகம்.

ரெனிஷ் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் ஜெர்மனி மற்றும் சூரத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் இணைந்து ஒரு AI கருவியை உருவாக்கியுள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டறிய 630 நபர்களின் குரலை ஆய்வு செய்துள்ளனர். அதில் 111 நபர்களுக்கு நிஜமாகவே சளி இருந்துள்ளது. அவர்கள் பேசும் தொனியை வைத்தே அவர்களுக்கு சளி இருக்கிறதா இல்லையா என்பதை AI கருவி மிகத்துல்லியமாக கண்டுபிடித்துள்ளது. 

சோதனையில் கலந்து கொண்டவர்களிடம் மேலும் சில கேள்விகளை கேட்டு அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை வைத்தே சொல்வது பொய்யா மெய்யா என்பதை கண்டறிந்துள்ளது இந்த AI. இந்த ஆய்வின் முடிவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் துல்லியத்தன்மையுடன் இந்த கருவி செயல்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதன் சதவீதத்தை மேலும் அதிகரிக்க சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இந்த கருவி மூலம் பொய் சொல்வதைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள் இல்லாமலேயே சளி, தடுமல் போன்றவற்றை ஒருவர் பேசுவதை வைத்தே எளிமையாக அடையாளம் காணலாம்.

வரும் காலங்களில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அருகே செல்லாமலேயே ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறன்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles