NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 வருடம் கழித்து வீட்டுக்கு வந்த Online Order!

டெல்லியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அவர் order செய்த பொருளானது 4 வருடங்கள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பில் குறித்த நபர் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘எப்போதும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். நான் அலி எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் 2019ஆம் ஆண்டு ஒரு பொருளை order செய்திருந்தேன். அது நான்கு வருடங்கள் கழித்து இப்போது தான் எனக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது’ என்ற வாசகங்களை இணைத்ததுடன் அந்த பார்சலின் புகைப்படத்தையும் தனது ட்வீட்டில் அவர் இணைத்துள்ளார்.


தொழிநுட்பம் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ள இந்த காலத்தில் இவ்வாறு நடந்துள்ளமை மற்றும் குறித்த நபர் பதிவிட்ட கருத்துக்கள் ஆகியன தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles