முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன.
ஸ்னாப்சாட் தளத்தில் ‘மை ஏஐ’ சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இன்ஸ்ட்டாகிராமில் இந்த தொழிநுட்பம் எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றியும் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் எவ்வித தகவலும் இது வரையில் வெளியிட்ப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.