NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Android போன்கள் அனைத்திலும் விரைவில் e-Sim! இனிமே Sim Card தேவையில்லை

நேரடி சிம் கார்டுகளுக்கு பதிலாக வந்ததுதான் ‘e-Sim’ எனப்படும் டிஜிட்டல் சிம் கார்டுகள். இந்த கார்டுகள் டிஜிட்டல் முறையில் இருக்கும். இதை ஒரு ஸ்மார்ட்போனில் நாம் பதியவேண்டும் அல்லது வேறு ஒரு ஸ்மார்ட்போனிற்கு மாற்றவேண்டும் என்றால் பெரும் தலைவலியாக இருக்கும். அதற்கு தீர்வாக Google MWC 2023 நிகழ்ச்சியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதுAndroid ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக eSim வசதியை அறிமுகம் செய்யப்போவதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இனி நேரடி சிம் கார்டுகளை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்துள்ளது,இந்த வசதி Google அறிமுகம் செய்யபோகும் Android 14 OS முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவே Google நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ‘Deutsche Telekom’ என்ற நிறுவனத்துடன் இணைந்து சுலபமாக e-Sim மாற்றுவதற்காக டெக்னாலஜி உருவாக்கிவருகிறது.

இந்த டெக்னாலஜி உருவானதும் Google நிறுவனம் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பாகவும் சுலபமாகவும் e-Sim மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கும். தற்போதுவரை E-Sim வசதி Apple iPhone போன்ற பிரீமியம் போன்களில் மட்டுமே இருந்துவருகிறது.இவற்றை நமது LTE வசதியுள்ள ஸ்மார்ட் வாட்ச்களிலும் பயன்படுத்தலாம். இந்த புதிய டெக்னாலஜி பற்றிய மேலும் விவரங்களை Google நிறுவனத்தின் இந்த 2023 ஆம் ஆண்டு I/O நிகழ்ச்சியில் வெளியிடும் என்று தெரிகிறது.இதேபோன்ற ஒரு டெக்னாலஜி Qualcomm நிறுவனம் ஏற்கனவே உருவாக்கிவிட்டது. Integrated Sim அல்லது i-Sim என்று அழைக்கும் அந்த வசதியை Qualcomm Snapdragon 8 Gen Processor சிப் உள்ள ஸ்மார்ட்போனில் ஏற்கனவே சோதனை செய்துவிட்டது. இந்த i-Sim இந்த சிப் உடன் இணைக்கப்பட்டு குறைந்த அளவு பேட்டரி உறிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னாலஜி உருவானதும் நாம் தனிப்பட்ட சிம் கார்டு பயன்படுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக நாம் டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து eSim பெற்றுக்கொண்டு Android போன்களில் பயன்படுத்தலாம். மேலும் நாம் ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து இன்னொரு ஸ்மார்ட்போனிற்கு e-Sim மாற்றுவது மிகவும் சுலபம்.

Share:

Related Articles