NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடரும் Twitter மாற்றங்கள் : குழப்பத்தில் பயனர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் Twitter Logo மாற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, Twitter தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

மற்ற Twitter ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதன்படி Twitter என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.

கடந்த செவ்வாய் கிழமை அன்று Twitter நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமாண்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய Logo காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதவிர ட்விட்டர்சப்போர்ட், ட்விட்டர்டெவ், ட்விட்டர் ஏ.பி.ஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. ட்விட்டரின் சந்தா முறை சேவையான ட்விட்டர் புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles