NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Thumbs-up emoji’யும் கையெழுத்துக்கு சமம்: தவறாக பயன்படுத்தியதால் பல இலட்சம் அபராதம்

தகவல்தொடர்புகளில் உணர்ச்சிகளை வெளிகாட்ட online உரையாடல்களின்போது, பல்வேறு தருணங்களில் எமோஜிக்களே அனுப்பப்படுகின்றன.

கனடாவின் சஸ்காட்செவானை சேர்ந்த விவசாயத் தொழில் செய்து வரும் கிறிஸ் ஆக்டர் பொருட்களை அளிக்கும் ஒப்பந்தம் தொடர்பாக தம்ஸ்-அப் எமோஜியை அனுப்பியதால் அவருக்கு சுமார் 5,088,893 கனடிய டொலர்கள் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் ‘தம்ஸ்-அப்‘ எமோஜியும் செல்லுபடியாகும் எனவும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொடுக்கல் வாங்கல் விவகாரமொன்றில் கையெழுத்துக்கு பதிலாக எமோஜி அனுப்பியமையும் இந்த நவீன யுகத்தில் கையெழுத்துக்கு சமம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles