NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WhatsAppல் நம்பரை சேமிக்காமல் மெசேஜ் அனுப்பலாம் !

இதுவரையில் WhatsAppல் ஒருவருடைய நம்பர்களை save செய்த பின்னரே அவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும்.

இவ்வாறு numberஐ save செய்யாது மெசேஜ் செய்ய அதிகாரப்பூர்வ வழி எதுவும் இல்லை என்றாலும் ஒருவர் நம்பரை சேமிக்காமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

1. முதலில் மொபைலில் நீங்கள் பயன்படுத்தும் ஏதெனினும் ப்ரௌசரை ஓபன் செய்யுங்கள். (உதாரணத்திற்கு கூகுள்)

2. பிறகு, wa.me/91XXXXXXXXXX என்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய எண்ணை டைப் செய்யுங்கள். ( XXXXXXXXXX என்ற இடத்தில், நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய நம்பரை டைப் செய்ய வேண்டும்).

3. இப்போது நீங்கள் நுழைந்தவுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும். இங்கு ‘Continue to Chat’ ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.

4. பிறகு நீங்கள் ‘Open with app’ என்பதை தேர்வு செய்தால், நீங்கள் அவரின் நம்பரை சேமிக்காமலேயே அவருடன் சேட் செய்ய முடியும்.

5. இதையடுத்து மற்றவர்களை போலவே நீங்கள் அவருடைய எண்ணிற்கு தகவல்களை பரிமாற முடியும்.

இந்த முறையைப் பயன்படுத்தி யாருடைய எண்ணைச் சேமிக்காமலேயே அவர்களுக்குச் செய்தி அனுப்பலாம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles