NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WhatsAppஇல் இனி நம்பருக்குப் பதிலாக விரும்பிய பெயரை பயன்படுத்தலாம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

WhatsApp செயலி பயன்படுத்த இதுவரை மொபைல் எண் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதற்கு பதிலாக அதிகாரபூர்வ பெயர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஆநவய நிறுவனம் தனியாக ஆராய்ச்சி வேலை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் இது WhatsApp Beta பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக ஏனையவர்களுக்கு கிடைக்கும்.

Meta நிறுவனம் விரைவில் WhatsApp செயலியில் பயனர்கள் பெயர்களை ஒவ்வொரு கணக்கிலும் தனியாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மொபைல் எண் பயன்படுத்துவதற்கு பதிலாக நமக்கு பிடித்தமான தனிப்பட்ட பெயர்களை பயன்படுத்தலாம்.

இது தற்போது ஆக்கத்தில் இருப்பதால் விரைவில் இதுபோன்ற வசதியை நாம் றூயவளயிp செயலியில் எதிர்பார்க்கலாம். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதும் நாம் WhatsApp Settings பக்கத்திற்கு சென்று அதில் Profile Section மூலம் பெயர்களை மாற்றலாம்.

இதில் நமக்கு பிடித்தமான பெயரை தேர்வு செய்ததும் நமக்கு மொபைல் எண் தேவைப்படாது. இந்த பெயரை வைத்துக்கொண்டே நாம் அடுத்தவர்களிடம் Chat செய்யலாம். குறிப்பாக இந்த பெயர் மூலம் Chat செய்வது எப்படி வேலை செய்யும் என்பது தெரியவில்லை என்றாலும் நாம் ஊhயவ செய்யும் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும். பயனர்களின் பாதுகாப்பை  Whatsapp  நிறுவனம் இதில் உறுதி செய்கிறது.

Share:

Related Articles