கடந்த ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் சமூக ஊடக தளத்தை $44 பில்லியனுக்கு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், டுவிட்டரின் லோகோவை மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
குறித்த லோகோ நீல பறவை சின்னத்திலிருந்து ‘X’ ஆக மாறும் என்று எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, டுவிட்டர் இனி ‘X’ என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘இது விதிவிலக்காக அரிதான விஷயம் – வாழ்க்கையிலோ அல்லது வியாபாரத்திலோ – மற்றொரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், ட்விட்டர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் நாங்கள் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியது. இப்போது, எக்ஸ் மேலும் சென்று உலகளாவிய வர்த்தகத்தை மாற்றும்’ எனத் தெரிவித்துள்ளார்.