எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார்.
இந்நிலையில், ‘எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும் எனக் கூறினயுள்ளார்.