(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து உலக வரலாற்றில் கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தை ரூபாயிலும் டொலரிலும் அளவிட முடியாது எனவும் இதனால் இந்நாட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இது உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் இரசாயன பேரழிவாகும். இதற்கு முன் இந்த அளவுக்கு அழிவு ஏற்பட்டதில்லை. நமது கடற்பாசிகளின் அழிவு, கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, நமது கடற்கரையோரங்களின் அழிவு, நமது வளிமண்டலத்தின் அழிவு போன்றவை உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் இரசாயன அழிவு இது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை மீட்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய அனைத்து அறிவியல் அறிக்கைகளின்படி, அழிவு மோசமாகி வருகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் இந்த விவாதத்தின் அடிப்படை நமக்குக் கிடைக்கும் இழப்பீடு கிடைப்பது பற்றியதாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.