NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த வருடத்தின் சிறுபோகத்திலிருந்து உர மானியத் தொகை 30,000 ரூபாவாக அதிகரிப்பு..!

நெற்செய்கைக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு 10,000 ரூபா மானியத்தை அடுத்த வருடம் முதல் 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மை காணப்படுவதால் உர மானியத்துக்காக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர் அடுத்த வருடத்தின் சிறுபோகத்திலிருந்து உர மானியத் தொகையை 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உர மானியத்தை 30,000 ரூபாவாக உயர்த்தினால் 30 பில்லியன் ரூபாவே செலவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles