NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் 17ஆம் திகதியன்று 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனை முன்னிட்டு, 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 4 நாட்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களை கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடபப்பட்டுள்ளது.

இந்நிலையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுகொள்ளார்.

Share:

Related Articles