NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை – போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை..!

திருத்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் குறித்து பயணிகள் அறிவிக்குமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பஸ்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கம் 1955 அல்லது வாட்ஸ்ஆப் இலக்கம் 071 2595555 இற்கு பயணிகள் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மற்றும் மாகாண பஸ் சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்தார்.

நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4.24 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டணம் 27 ரூபாவும் திருத்தப்பட்டுள்ளது.

எனினும், குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பஸ் கட்டணம் குறைக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செப்டெம்பர் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 34 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன் பயனை தங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles