புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார தெரிவித்துள்ளார்
வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சராசரியாக ஒவ்வொரு நாளும் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 100,000 வாகனங்கள் பயணிப்பதாகவும்,
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டும் 145,000 வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் ஊடாக கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் அமலும் குறிப்பிட்டுள்ளார்.