அத்துருகிரிய – ஒருவல பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் பச்சை குத்தும் கடையின் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு புறநகர் பகுதியான அதுருகிய நகரில் உள்ள அமணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) காலை 10 மணியளவில், அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தா மற்றும் 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகர் கே சுஜீவாவும் காயமடைந்தார், மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்தனர்.
எவ்வாறாயினும், ‘கிளப் வசந்த’ கொலையானது நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் ஒன்றான கஞ்சிபானி இம்ரானின் திட்டமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளில் கிடைத்த தகவலின்படி, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் T56 துப்பாக்கியின் தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் ‘KPI’ என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் விரிவாக்கம்’கஞ்சி பானி இம்ரானாக’ இருக்கலாம் என பொலிர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டா மேலதிக விசாரணைக்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்