NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அநுராதபுரம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

அநுராதபுரம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாலின நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அஜித் கரவிட்ட தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அனுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 17 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாயின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவியதாக கூறப்படும் 5 குழந்தைகள் அனுராதபுரம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளும், 25 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுமே எய்ட்ஸ் நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles