கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கண்டுகளை லோறி மற்றும் உளவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் தருமபுர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம் கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வாகனத்தில் தண்ணீர் உணவு என்பனவற்றை ஏற்படுத்திக் கொடுக்காமல் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேக நபர் நால்வரும் இன்றைய தினம்02.12.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பு டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.