அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி இலங்கையின் தேசிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் சேர்த்து, ஒவ்வொரு ஊழியருக்கும் 15,000 ரூபா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்யவும், அடுத்த ஆண்டு முதல் சம்பளத்தை மாற்றியமைக்கவும் ஏற்கனவே குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்காக செலவிடப்படும் பணத்தை ஏதோ ஒரு வகையில் மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும், இல்லையேல் அடுத்த நான்கு மாதங்களுக்கு சிக்கல் ஏற்படும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இதன் கனத்தை அடுத்த அரசாங்கம் சுமக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.