NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு.

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹண்டர் பைடன் தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018 ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றறு வந்த நிலையில் அவரை குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமேலும், அமெரிக்க அதிபரின் மகன் ஒருவன் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles