அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ஆம் திகதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ அங்கிருந்த ஏனைய பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில் சுமார் 36 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகி உள்ளன.
மேலும் ஹொலிவுட் பிரபலங்கள் உட்பட சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் தீக்கிரையாகின. எனவே வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
உயிரிழந்தவர்களில் 8 பேர் பாலிசேட்ஸ் தீ மண்டலத்திலும், 16 பேர் ஈடன் தீ மண்டலத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.