NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர்.

சிறப்புரிமை மூலம் தபால் வாக்கு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில், ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் வாக்குகளுடன் கூடிய 2 வாக்குப் பெட்டிகளுக்கு மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வொஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles