கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்று வரை அது உருமாற்றமடைந்து, உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் பரவி வருகின்றன.
தற்போது அமெரிக்காவில் ஓமிக்ரானின் JN.1 வம்சாவளியைச் சேர்ந்த FLiRT வேகமாக பரவி வருகிறது.
முக்கியமாக இந்த வகை மாறுபாடு அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் கொரியா போன்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இப்படி பரவுவதைப் பார்க்கும் போது, எங்கு கோடையில் இது ஒரு புதிய அலையை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதோடு இந்த வகை முந்தைய ஓமிக்ரான் வகையைக் காட்டிலும் அதிகம் தொற்றக்கூடியதாக கருதப்படுகின்றன.
என்ன தான் கொரோனா வைரஸில் பிறழ்வுகள் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.