NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!



அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று (07) இடம்பெற்ற போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கே இராஜாங்க அமைச்சரால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அதிகாரிகளின் கவனயீனம் அதிளவில் தவறுகள் ஏற்பட்ட நிலையில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles