NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக சமகால அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது எமது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று புதன்கிழமை (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கொழும்பு மலர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் அவர் மேலும் கூறியதாவது,

”அரசியலமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானித்திருந்தோம்.

எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.

அமைச்சு என்பது ஒரு அமைப்பு. அமைப்புக்கு சட்டங்கள் இல்லை. அரசியலமைப்பின் 52வது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles