அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 2 அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக இறுதி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக குறித்த இருவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சு.ஆ.யு.டு.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் முதல்தடவையாக நேற்று(07) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.