மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபை என்பவற்றின் உபகரணங்கள் அண்மைக்காலமாக திருட்டுப் போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றான மில்கோ நிறுவனம் ஹைலன்ட் பால் மா, யோகட், பதப்படுத்தப்பட்ட பால், போத்தலில் அடைக்கப்பட்ட பால் என பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனமாகும்.
அதேபோன்று தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையும் தயிர் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்களை இந்தியாவின் அமுல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த நிறுவனங்களின் உபகரணங்களை அவற்றின் ஊழியர்களே திருடிச் செல்வதாக தெரியவந்துள்ளது. மின்விளக்குகள் கூட அவ்வாறு ஊழியர்களினால் திருடிச் செல்லப்படுவதாக கூறப்படுகின்றது
குறித்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







