(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் 23 மருந்தாளர்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.