NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், தட்டுப்பாடு நிலவும் மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படுமென மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles