NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ – திட்டத்தை முழுமைப்படுத்த தீர்மானம்!

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளை தற்போது மீளாய்வு செய்து வருவதாகவும், இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, அந்தப் பாடசாலைகள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்து, தமதுதிட்டத்தின்படி, 3 கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் செல்லக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்கவும், இதுபோன்று பல பாடசாலைகளை இணைத்து முழுமையான மேல்நிலை பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவு குறிப்பிட்டார்.

மேலும், 80ம% – 90% வேலைகளை முடித்த பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles