அறுவடை செய்யப்பட்ட சோளம் விவசாயிகளிடம் இருந்தால் அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் சோளத்தை களஞ்சியப்படுத்தினாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறையலாம் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சந்தையில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை உள்ளதால், கையிருப்பில் உள்ள மக்காச்சோளத்தை விரைவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.