(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நடவடிக்கை, பயணிகளுக்கான தரமான சேவையை உறுதிப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், Fitz Airஇன் A.320 ரக விமானமும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ-330-200 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த பெல்ஜியத்தின் விமானங்கள் பெல்ஜிய எயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.
இந்த விமானங்களில் 22 வணிக வகுப்பு இருக்கைகளும், 240 பொருளாதார வகுப்பு இருக்கைகளும் உள்ளன.
ஏர் பெல்ஜியம் பணியாளர்களால் மேம்படுத்தப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் வணிக வகுப்பு இருக்கைகள், ஸ்ரீலங்கன் விமானிகளுக்கு மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வணிக வகுப்புக்கள் மறுக்கப்பட்டமையால், இலங்கை விமானிகள் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர். இந்நிலையில், UL 501 என்ற குறித்த விமானத்தை இயக்கிய ஏர் பெல்ஜியம் விமானியான, கேப்டன் பிலிப் என்னகென், விமானிகளை இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன், ஐந்து நிமிடங்களுக்குள் விமானத்தில் ஏறவில்லை என்றால் விமானம் புறப்படும் என்றும் எச்சிரித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை விமானி கில்ட் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமையால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.