NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலிய ஓபன் – ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் நம்பர் வன் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் அதிர்த்தி தோல்வியடைந்தார்.

சற்று முன்னர் மெல்போர்ன் ராட் லேவர் அரங்கில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான இத்தாலியின் v சின்னரை அவர் எதிர்கொண்டார்.

சுமார் மூன்று மணி நேரம், 22 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் செர்பிய வீரரை ஜன்னிக் சின்னர் 6-1 6-2 6-7(6) 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இதனால் 11 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்வதற்கான நோவக் ஜோகோவிச்சின் கனவு முடிவுக்கு வந்தது.

அதேநேரம், ஜன்னிக் சின்னர் தனது வாழ்நாளில் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை அடைந்தார்.

ஜோகோவிச்சைப் பொறுத்தவரை, இது மெல்போர்ன் அரங்கில் நடந்த அரையிறுதியில் அவரது முதல் தோல்வி மற்றும் 2018 க்குப் பின்னரான போட்டியில் அவரது முதல் தோல்வியாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles