NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக்கூறி பண மோசடி செய்த நபர் கைது!

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடமிருந்து 75 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் , ” அவுஸ்ரேலியா செல்ல விருப்பமா ? ” என்ற விளம்பரத்தை நம்பி , அந்த விளம்பரத்தில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் உரையாடியுள்ளார்.

அவர்களும் நம்பிக்கை தரும் வகையில் உரையாடி ,ஆசிரியரிடம் இருந்து கட்டம் கட்டமாக 75 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

நீண்ட நாட்களாக தனது அவுஸ்திரேலிய பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , சந்தேகம் அடைந்த ஆசிரியர் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , கொழும்பை சேர்ந்த குறித்த சந்தேக நபரை கைது செய்து , யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles