NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அஸ்வெசும’ நலன்புரி திட்ட பயனாளர்களுக்குரிய பெயர் பட்டியல் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் உள்ளடங்கிய மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக பயனாளிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் பட்டியல் ஏற்கனவே சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக, நலனபுரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை (05) முதல் இந்தப் பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள், நலன்புரி மற்றும் சுகாதார அமைச்சகங்களால் அங்கீகரிக்கப்பட்டு பெறப்பட்ட பட்டியல்கள் எந்தவித திருத்தமும் செய்யாமல் நிவாரணப் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுநீரக உதவித்தொகைகளை பெறுவதற்கு உரிமையுள்ள எந்தவொரு நபருக்கும் நிவாரணத் திட்டத்தின் கீழ் உரிய கொடுப்பனவுகள் குறைவில்லாமல் வழங்கப்பட மாட்டாது என்று நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

புதிதாக விண்ணப்பித்த நபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பு பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles