NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளர் நியமனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக தகஃபுமி கடோனோ (Takafumi Kadono) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக கடந்த 30 ஜூன் 2023ஆம் திகதி வரை சென் சென் (Chen Chen) செயற்பட்டு வந்தார்.

அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக கடோனோ தற்போது பதவியேற்றுள்ளார்.

ஜப்பானிய நாட்டவரான, கடோனோ, கிழக்கு ஆசிய பிராந்தியத் துறையில் இளம் நிபுணராக 2006 இல் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைந்துள்ளார்.

அதன் பின்னர் மத்திய, மேற்கு ஆசிய திணைக்களம் மற்றும் தென்கிழக்கு ஆசிய திணைக்களத்தில் எரிசக்தி நிபுணராக முதன்மையான பதவிகளை வகித்துள்ளார்.

Share:

Related Articles