(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.